மகள், பேரன் மாயம் போலீசில் தாய் புகார்

குளித்தலை:மகள், பேரன் மாயமானதாக, போலீசில் தாய் புகாரளித்துள்ளார்.

குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 60. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் கோகிலா, 31. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கோகிலா கோபித்துக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
கடந்த ஓராண்டாக கோகிலா, தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் இருந்து வருகிறார். இரவு நேரங்களில் கோகிலா மொபைல்போனில், அதிக நேரம் பேசுவது தெரியவந்து. தாய் முத்துலட்சுமி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 26ம் தேதி காலை 9:00 மணியளவில் கோகிலா அவரது மகன் சஷ்டிக், 3, இருவரும் காலைக்கடன் கழிக்க செல்வதாக கூறி சென்றவர்கள், வெகுநேரமாகி வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மகள், பேரன் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement