வாலிபர் மாயம்: தந்தை புகார்

கரூர்:கரூர், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நரேந்திர குமார், 28; திருமணம் ஆகவில்லை. வீடு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு, உள் கட்டமைப்பு செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு நிறைய கடன் உள்ளது.

இந்நிலையில் கடந்த, 27ல், வேலைக்கு சென்ற நரேந்திர குமார், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கதிரவன், 58, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement