சேவல் சண்டை: 10 பேர் கைது

கரூர்:தென்னிலை அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்னிலை இன்ஸ்பெக்டர் சுகன்யா உள்ளிட்ட போலீசார் கடந்த, 28ல், அகிலாண்டபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சக்திவேல் என்பவரது தோட்டத்தில், சேவல் சண்டை நடத்தியதாக சக்திவேல், 54; விமல்குமார், 42; தியாக ராஜன், 38; கவின்குமார், 31; ஆனந்த், 33; ரவிக்குமார், 54; தினேஷ், 33; ஜெகதீஸ்வரன், 42; மணிகண்டன், 37; கார்த்திகேயன், 39; ஆகிய, 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, இறந்த நிலையில் இரண்டு சேவல் மற்றும் 500 ரூபாயை தென்னிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement