தனுஷ் எப்படி ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்த போகிறார்?: அந்துமணி பதில்கள்
@block_B@ம.ராஜராஜன், தஞ்சாவூர்:
'பதவி உயர்வு, இட மாறுதலுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளதே?
block_B
அப்படியே அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்ய வேணடும்; பொதுமக்களை அலைக்கழிக்கக்க கூடாது என்றும் எச்சரிக்கலாம்.
@block_Y@ரா.ராஜேந்திரன், அரியலுார்:
காங்., ராகுல், பிரியங்கா இடையே மோதல் என, பா.ஜ., பேசுவது குறித்து?
block_Y
உடனே இருவரும் சிரித்தபடி கைகோர்த்து, கரப்பான் பூச்சிகளுடன் சேர்ந்து ஒரு போராட்டத்தில் இறங்கி விடுவரே!
@block_P@ஆர்.நளினி, கோவை:
ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவு எதை எடுத்துக்காட்டுகிறது?
block_P
நாம் இயற்கையை அதன்போக்கில் விடாமல், ஆக்கிரமிப்புகளையும், குப்பைக்கூளங்களின் காடாகவும் மாற்றினால், இயற்கை சீற்றம் பெற்று, இப்படி கொந்தளிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
@block_G@கி.பாலமுருகன், ராமநாதபுரம்:
இன்ஜினியரிங் படிக்காத உத்தரகண்ட் மாணவர் ரவிதம்பா, பறக்கும் காரை உருவாக்கி இருக்கிறாரே?
block_G
ஏட்டு சுரைக்காய் மட்டும் போதாது; சுயபுத்தியும், விடாமுயற்சியும், கற்பனை திறனும், அதை செயல்படுத்தும் சாமர்த்தியமும் மாணவர்களுக்கு அவசியம் என்பதை நிரூபித்துள்ளார் ரவி தம்பா.
@block_B@கே.தேன்ராஜா, நெய்வேலி:
'ரசிகர்களின் சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும்' என்று, நடிகர் தனுஷ் கூறுகிறாரே?
block_B
அது சரி... தன், மகளிரணி முதல் மாநாட்டிற்கே நான்கு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். மழையில் நனைந்த நிர்வாகிகளுக்கு சரியான ஏற்பாடுகளும் செய்யவில்லை. அங்கு வந்த ஆண் ரசிகர்களை, தனுஷின் நிர்வாகிகள் விரட்டி அடித்துள்ளனர். இவர் எப்படி ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்த போகிறார் என்ற கேள்வி எழுகிறதே!
@block_Y@மு.நாகூர், ராமநாதபுரம்:
'சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாரிப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது' என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளாரே?
block_Y
தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டிய தகவல். அரசியல்வாதிகள், 'கட்டிங்' வாங்குவதை விட்டு நம் தொழிற்சாலைகளை வளர்த்தால், தமிழகம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
@block_P@மு.செல்வி, வேலுார்:
'வீ த லீடர்ஸ்' அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தலில் தன் கட்சி, எட்டு லட்சம் பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் எனக்கூறி இருக்கிறாரே?
block_P
அண்ணாமலை யதார்த்தவாதி ஆயிற்றே. அவரும் இப்படி மனக்கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டாரே!
அரசு ஊழியர்கள் தங்களது பதவி உயர்வு, இட மாறுதலுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்த கூடாது என்பது வரவேற்க தக்கது. ஆனால் அரசு என்ன உத்தரவு போட்டாலும், லஞ்சம் வாங்குவது எனது பிறப்புரிமை என்று மார் தட்டும் அரசு ஊழியர்களை, அரசு எப்படி சமாளிக்க போகிறது?
இவர்களுக்கு இல்லாத ரசிகர்களை தனுஷுக்கு? சூப்பர்ஸ்டார் அவர்களை நம்பி இறங்குவதை விட மண் குதிரையே பெட்டர். ஆல் தி பெஸ்ட் அண்ட் குட் லக்
நடிகர் தனுஷ் தன் பலம்
மற்றும் மாமனார் ரஜினியின்
பலத்தை பெரிதாக நினைத்து அரசியலில் குதிக்கிறார்...தி.மு.க துரைமுருகன் எம்ஜிஆர்
விஜய் யாக எல்லா நடிகரும்
ஆகி விடமுடியாது உண்மை
சொல்லிவிட்டார்...அப்போ
புது வரவுகள் பத்தோடு
ஒன்றா..?மேலும்
-
தொழுநோய் தடுப்பு முகாம்
-
நவீன வசதிகளுடன் புது பொலிவு பெறும் புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதி
-
2ம் கட்ட ‘மாப் அப்’ சுற்று தகுதி பட்டியல் வெளியீடு
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பு கூட்டம்: பாகிஸ்தானுக்கு அழைப்பு
-
‘பாலியல் தொல்லை, வன்கொடுமை குறித்து மாணவ பருவத்தில் விழிப்புணர்வு வேண்டும்’
-
இளம்பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு சாகும் வரை சிறை