‘பாலியல் தொல்லை, வன்கொடுமை குறித்து மாணவ பருவத்தில் விழிப்புணர்வு வேண்டும்’
கிருஷ்ணகிரி: ‘‘பாலியல் தொல்லை, வன்கொடுமை குறித்து, மாணவ பருவத்திலேயே அறிந்து விழிப்புடன் இருக்க வேண்டும்,’’ என, மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை வகித்தார். சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, சிறப்பு நீதிபதி பத்மநாபன், கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மிஸ்பா செல்வ பிரியங்கா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேசியதாவது:
பாலியல் தொந்தரவு, பாலியல் வன்கொடுமை என்பது, சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு மட்டும் நடக்கும் தொல்லைகள் என நினைக்கக்கூடாது. இது அனைத்து தரப்பினருக்கும் நடக்கும் உணர்வு ரீதியான அத்துமீறலாகவும், குற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நடந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழந்தைகள் உதவி எண் மற்றும் சட்ட உதவி குழுக்கள், போலீசார் உள்ளிட்டோரை நாட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, பல்வேறு குழுக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு குழு சட்ட சேவைகள் மையம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து இயங்கி வருகின்றன. இது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். எங்கு தவறு நடந்தாலும் அதை துணிச்சலாக எடுத்து கூறி, முன்னோடி மாணவர்களாக திகழ வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
தொழுநோய் தடுப்பு முகாம்
-
நவீன வசதிகளுடன் புது பொலிவு பெறும் புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதி
-
2ம் கட்ட ‘மாப் அப்’ சுற்று தகுதி பட்டியல் வெளியீடு
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பு கூட்டம்: பாகிஸ்தானுக்கு அழைப்பு
-
இளம்பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
-
வெள்ளி கொள்ளை வழக்கு மேலும் 5 பேருக்கு ‘காப்பு’