தொழுநோய் தடுப்பு முகாம்

அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் தலைமை வகித்தார். மதுரை ரோட்டரி மிட்டவுன் கிளப் சார்பில் 30 தொழுநோயாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை நிர்வாகிகள் அருண் சந்தோஷ், முத்து பிரபு, கணேசன், மூர்த்தி, பார்த்திபன் வழங்கினர். சிங்கப்பூர் சாய் கோல் பானு, விஜயலட்சுமி சார்பில் மோகன் குமார், சிவக்குமார் மதிய உணவு வழங்கினர்.

சுகாதார நிலைய பணியாளர்கள் மாரிராஜ், சரவணன், அழகுமலை ஒருங்கிணைந்தனர். மேற்பார்வையாளர் முத்து மாயன் நன்றி கூறினார்.

Advertisement