ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பு கூட்டம்: பாகிஸ்தானுக்கு அழைப்பு
புதுடில்லி: பாகிஸ்தான் தலைமை ஏற்றுள்ள, எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், முதல் நாகரிக பாரம்பரிய கருத்தரங்கில் பங்கேற்க பாகிஸ்தான் உட்பட 10 உறுப்பு நாடுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய நல்லுறவு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
இந்த அமைப்பின் தலைவர்கள் மாநாடு 2025ல் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்தது. அப்போது கலாசாரம் மற்றும் நாகரிக பாரம்பரியம் சார்ந்த கருத்தரங்கு மன்றத்தை உருவாக்கும் யோசனையை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். இந்த முன்மொழிவுக்கு ஷாங்காய் அமைப்பு ஒப்புதல் அளித்தது. செப்டம்பர் 1 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.
இந்நிலையில், டில்லியில் உள்ள 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புரானா கிலா கோட்டையில், நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் நாகரிக பாரம்பரியம் கருத்தரங்கு மன்றம் நடக்க உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்.
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நாகரிக தொடர்புகள், கலாசார உறவுகள் மற்றும் பாரம்பரிய அறிவு முறைகளில் கூட்டாக செயல்படுதல் உள்ளிட்டவை குறித்து இந்த மன்றத்தில் விவாதிக்க உள்ளனர்.
வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மத்திய கலாசார அமைச்சகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்க, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் கலாசார அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், பெலாரஸ் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் கலாசார துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2023ல் கோவாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பங்கேற்றிருந்தார்
மேலும்
-
தொழுநோய் தடுப்பு முகாம்
-
நவீன வசதிகளுடன் புது பொலிவு பெறும் புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதி
-
2ம் கட்ட ‘மாப் அப்’ சுற்று தகுதி பட்டியல் வெளியீடு
-
‘பாலியல் தொல்லை, வன்கொடுமை குறித்து மாணவ பருவத்தில் விழிப்புணர்வு வேண்டும்’
-
இளம்பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
-
வெள்ளி கொள்ளை வழக்கு மேலும் 5 பேருக்கு ‘காப்பு’