இளம்பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மன வளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அடுத்த கோசாலை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி பாஷா, 52. இவர், கடந்த, 2023ம் ஆண்டு, மன வளர்ச்சி குன்றிய, 16 வயது இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள், திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார், தொழிலாளி பாஷாவை போக்சோவில் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா நேற்று, தொழிலாளி பாஷாவிற்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி