சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கிச்சூடு; சிறைத்துறை உத்தரவு
- நமது சிறப்பு நிருபர் -
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி மாவட்ட சிறையில், காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய கைதிகள் 17 பேரில், மலைக்கரட்டில் பதுங்கிய, 8 கைதிகள், 'ட்ரோன்' தேடுதலில் சிக்கினர். இவர்களுடன் மொத்தம், 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து டிஜிபி ரத்தோர் அதிரடி உத்தரவிட்டார்.
கண்காணிப்பு கோபுரத்தில் இனி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்; அவர்கள் சிறையில் இருந்து தப்ப முயற்சி, போலீசார் மீது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களின் போது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் வர உள்ளன என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு வீடியோ!
சிறையில் இருந்து தப்பினால் இனி துப்பாக்கிச்சூடு; கண்டதும் சுட உத்தரவு; சிறைத்துறை அதிரடி முடிவு
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு