கரூரில் கதையை முடித்திருந்தால்... வாய்கொழுப்பில் பேசிய திமுக கவுன்சிலருக்கு ஜாமின்

34

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதற்கு, ரூ.100 கோடி மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மகேஷ் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவர் புழல் சிறை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை, போலீசாரை சூழ்ந்த தி.மு.க.,வினர், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புழல் சிறையில் அடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், தி.மு.க.,வை சேர்ந்த, வேலுார் மாநகராட்சி கவுன்சிலரும், மகேஷ் ஆதரவாளருமான டீட்டா சரவணன் ஆவேசப்பட்டார்.

'கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே' என, மகேஷிடமாக கூறியுள்ளார். புகாரின் பேரில், டீட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தகவல் அறிந்து தலைமறைவான டீட்டா சரவணனை தேடி வந்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.

சிறப்பு வீடியோ!

முதல்வருக்கு மிரட்டல்; திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!

Advertisement