புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
- நமது சிறப்பு நிருபர் -
வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையை கடந்த புயலுக்கு முரசு என தமிழ் கலாசாரப் பின்னணி கொண்ட ஒரு பெயர் சூட்டபட்டு இருந்தது. இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற தமிழ்ப் பெயர், வரலாற்றில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளது.
பாரம்பரியத் தமிழ் இசைக்கருவியான 'முரசு' என்பதன் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கூறுகையில், ''2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளிகளுக்குப் பெயரிடும் முறை துவங்கியதில் இருந்தே, புயலுக்கு வைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெயர் 'முரசு' தான்,'' என்றார்.
வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: நாங்கள் கடல், மீன், கடற்கரைப் பகுதிகள் மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான பெயர்களைப் பரிந்துரைத்தோம். 'முரசு' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், பண்டைய காலத்தில் தகவல்களைப் பரப்பவும், இயற்கை பேரிடர்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த இசைக்கருவி பயன்படுத்தப்பட்டதுதான்.
மேலும், இது இடி போன்ற முழக்கத்தையும் குறிக்கிறது. இந்தியா, உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் குழுவிடம் 13 பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பட்டியலில் 'கதி' (Gati) மற்றும் 'தேஜ்' (Tej) ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பெயராக 'முரசு' இடம்பெற்று இருந்தது, என்றனர்.
பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், பெயர்கள் பரிந்துரைத்த காலத்தில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றினார். 'திருக்கை', 'கலப்பை', 'ஏர்' மற்றும் 'நாவாய்' போன்ற பெயர்களும் புயல்களுக்கு சூட்டுவதற்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. எனினும் இந்தப் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.
பெயர்கள் எளிதாக உச்சரிக்கக்கூடியவையாக இருக்க வேண்டும், அதிகபட்சம் எட்டு எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும்; நடுநிலையானவையாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் காரணமாக இவை பட்டியலில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்