இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!

19

-நமது நிருபர்-

சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கைரா கிராமம். இங்கு மொத்தம் 141 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் தலா 2 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. பிஎம் சூர்ய கர் முப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் இந்த பேனல்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமமாக கைரா மாறியுள்ளது.

இது அங்கு வசிக்கும் 889 குடியிருப்பாளர்களின் 282 கிலோவாட் மின் தேவையை இந்த பேனல்கள் பூர்த்தி செய்கின்றன. இவற்றை அமைப்பதற்கான அடிப்படை செலவை மத்திய, மாநில அரசு மானியங்கள் ஈடுகட்டின, மீதமுள்ள தொகை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்டது. குடியிருப்பாளர்களுக்கு சொந்தப் பணத்திலிருந்து எந்தச் செலவும் ஏற்படவில்லை.

கிராம மக்கள் தங்களின் தேவைக்கு போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்கி, வருமானம் ஈட்டும் ஆற்றல் தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர். 141 வீடுகளில், 93 வீடுகள் முதல் நாளிலிருந்தே சூரியசக்தியைப் பெற்றன.

Advertisement