பத்திரிகையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர்
வேலூர்: வி.ஐ.டி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா கடந்த அக்.,26 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைப்பெற்றன.
இதை தொடர்ந்து, ஏராளமானோர் ஜி.வி.செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவுக்கு செய்தி சேகரிக்க வந்த புகைப்படக்கலைஞர்கள் உள்பட பத்திரிக்கையாளர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களை ஜி.வி.செல்வம் புகைப்படம் எடுத்தார். இது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜி.வி.செல்வத்தின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement