கேள்விகளுக்குப் பதில் வேண்டும்; ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ஸ்டாலின் முன்வைத்த 9 கோரிக்கைகள்!
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பிய மனுவில், 9 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:
1. தேர்தல் கமிஷனின் பெரும்பான்மை ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட முடிவுகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும்.
2. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதுவரை 100% VVPAT எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும்.
3. குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் பாதுகாக்கத் தேவையான அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4. எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்களில் பயன்படுத்த கூடாது.
5. நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
6. ECINET, ERONET தேர்தல் கமிஷன் சாராத வல்லுநர்களைக் கொண்டு தடயவியல் ஆய்வு நடத்த வேண்டும்.
7. தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. தேர்தல் கமிஷனில் தனிநபர் ஆதிக்கத்தைத் தடுத்து, கூட்டு முடிவெடுக்கும் முறையை உறுதி செய்ய வேண்டும்.
9. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாதது மற்றும் தேர்தல் முடிவுகளில் அதன் தாக்கம் குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும்.
@block_P@
கேள்விகளுக்கு பதில் வேண்டும்!
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? தேர்தல் கமிஷனின் நம்பகத் தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள். ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை; எஸ்ஐஆர் ரத்து; மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனு அனுப்பி உள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை.
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும். ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_P
பொய்களின் அடிப்படையில் ஜனாதிபதியிடம் மனுக்கொடுக்கும் ஒரு கட்சியை தற்க்குறி கட்சி என்றே அழைக்கலாம்.
செத்தவன் ஒட்டை யும் இரண்டு மூன்று இடத்தில் ஒட்டு உள்ளவர்களையும், குடிபெயர்ந்தவர் ஒட்டையும் விட்டு இருந்தால் கொளத்துர் மடடுமில்லை எல்லாம் இடத்தில் கள்ள ஒட்டு போட்டு ஜெயித்து என் கோட்டை சென்னை எனதெனவட்டு பேச்சு இருந்து இருக்கு ம் மீண்டும் ஆறு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்காலாம்டாஸ்மாக்கில் கணக்கு வழக்கு இல்லாம கொள்ள ளை அடிக்க இருக்காலாம்
தம்பி டீ இன்னும் வரல...
கள்ள வோட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பட்டவர்தமாக கேளுங்கள்.. இந்த கேள்விகளை கேட்க வெட்கம் என்பதே இல்லை .
"யார் அந்த சார்?" என்ற கேள்விக்கே இது வரை பதில் இல்லை, இவர் கேட்கிறாராம் கேள்வி, அதுவும் ஜனாதிபதியிடம்.
மேற்க்கூறியவாறு கேட்கத்தோன்றுகிறது, ஆனால் நான் கேட்கவில்லை.
He is very desperate to regain his lost power. H may go to any length to regain his power. Hope he dont succeed.
கொள்ளையடித்து விட்டு, ஜனாதிபதியை கேள்வி கேட்க என்ன அருகதை உள்ளது என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால் நாகரிகம் கருதி கேட்காமல் விட்டு விடுகிறேன்.
தேர்தல் அதிகாரியை ராஜினாமா மற்றும் பதவியை நீக்குவது முடியாத ஒன்று
நீங்கள் கூறிய அதே சட்டம் தான் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது
நீங்கள் கூறிய சட்டத்தின் படியும் நீங்கள் கூறிய ஜனநாயகத்தின் படியும்
ஒருவர் இருந்து ஓட்டுக்கள் வைத்திருக்க முடியாது
அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் எவரும் இந்தியாவில் ஓட்டு போடவும் முடியாது
நீங்கள் தோற்று விட்டீர்கள் அதற்கு வருத்தப்படுகிறோம்
அதற்காக தேர்தல் கமிஷனை புகார் அளிக்க வேண்டாம்
வேற ஏதாவது அரசியல் செய்யவும்
பி ஜே பி யின் காலில் விழுந்து திமுகவினர் கைது, கோர்ட் கேசுகளில் இருந்து தப்பிக்க வைப்பார்கள். மேலும் திமுகவுக்கு கவர்னர், ஜனாதிபதி இவர்கள் எல்லாம் அலர்ஜி ஆயிற்றே, பிறகு எப்படி ஒரு உபயோகமற்ற இந்த மனு. மக்களை ஏமாற்றவா.
தமிழ்நாட்டு மக்கள் இவனுங்க ஊழல்க்லைபார்த்து முகத்தில் காறித்துப்பிக்கொண்டு இருக்கின்றார்கள் .அவர்களின் மடைமாற்றம் செய்யும் என்னத்தில்தான் இந்த ஜனாதிபதிக்கு விடுக்கும் கேள்விகள் .இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல கேள்விகேட்டபவர்களுக்கு தகுதி இல்லை .ஆட்சியிலிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது தெரியாதா ? தேர்தலில் ஜெயிச்சா நல்ல தேர்தல் .தோற்றால் தவறான தேர்தல் இவனுங்களுக்கெல்லாம் .தமிழ்நாட்டுமக்கள் இன்னுமடிமைத்தனத்தில்தான் இருப்பது இவர்களுக்கெல்லாம் ஆதாயம் .மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி