அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி

2

நமது நிருபர்

கடலுார் குண்டு உப்புலவாடியை சேர்ந்தவர் வீரமணி, 50; ரைஸ் மில் ஊழியர். இவர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். பைக்கை படியில் ஏறி செல்லும்போது தவறி கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன் குடும்பத்தினர் அவரை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிளேட் பொருத்தப்பட்டது. தினமலர் ஆண்டு சந்தா ரூ. 2499 செலுத்தியதன் பயனாக ரூ. 10,256 மருத்துவ செலவிற்கு கிடைத்தது. இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக தினமலர் வாசகராக உள்ளேன். கடந்த 2024ம் ஆண்டு முதல், ஆண்டு சந்தா செலுத்தி வருகிறேன். கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டில் தவறி விழுந்த போது எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ செலவாக 77 ஆயிரம் ரூபாய் செலவானது. இதனை கடன் வாங்கி தான் செலுத்தினேன்.

இதற்கிடையே விபத்து காப்பீடு தொடர்பாக தினமலர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் கூறியது போல் மருத்துவ செலவிற்கான பட்டியலை வழங்கினேன். அதன் பேரில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாகம் மருத்துவ செலவு தொகையாக 10,256 ரூபாய் வழங்கியது. அவசர காலத்தில் மருத்துவ செலவிற்கு உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement