ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்

1

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. தாக்குதல் ஒருபுறம் நிறுத்தியிருந்தாலும், ஹார்முஸை கைப்பற்றுவதற்கான அதிகார மோதல் தொடர்ந்து வருகிறது. தற்போது, ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது.

அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, மேற்காசிய பிராந்தியத்தில் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபர் டிரம்புக்கான மக்கள் ஆதரவு 32 சதவீதமாக குறைந்துள்ளது. இது இடைத்தேர்தலில் எதிரொலித்து விடக் கூடாது என்பதற்காக, தற்காலிகமாக தாக்குதலை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஈரானுக்கு எதிரான போரினால் அமெரிக்காவிற்கு இதுவரையில் 4 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவாகியுள்ளது.

Advertisement