இடம் தகராறு 4 பேர் மீது வழக்கு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே இடம் தகராறில் ஒருவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டியைச் சேர்ந்தவர் காண்டீபன், 64; இவரது வீட்டின் பின்புறம் பூர்வீக சொத்து ஏழரை சென்ட் வீட்டு மனை உள்ளது. இந்த மனையில் இருந்த எலுமிச்சை மரத்தில் நேற்று (அக்.,27) சக்திவேல், 58; என்பவர் பழம் பறித்தார்.
அதனை காண்டீபன் கேட்டதற்கு சக்திவேல் தங்களுக்கும் இடம் சொந்தம் எனக் கூறி சக்திவேல், அவரது மகன் தட்சணாமூர்த்தி, 32; மற்றும் உறவினர்கள் அய்யாசாமி. ,57; அவரது மகன் அரிக்குமார், 30; ஆகியோர் சேர்ந்து காண்டீபனை தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சக்திவேல் உட்பட 4 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement