பஸ் உரிமையாளர்கள் பாலக்காட்டில் பேரணி
கேரள மாநிலத்தில்: ம் தேதி முதல் தனியார் பஸ்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பாலக்காட்டில் கண்டன பேரணி நடந்தது.
பாலக்காடு ஸ்டேடியம் பஸ் நிலைய வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி, அரசு பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பேரணியை கூட்டு நடவடிக்கை குழுவின் பொது அமைப்பாளர் கோபிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைவர் கோகுல்தாஸ் தலைமை வகித்தார். அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான வித்யாதரன், ராதாகிருஷ்ணன், பேபி, மணிகண்டன் உள்ளிட்டோர், போராட்டத்தின் அவசியம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement