லாரி – ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் காயம்: அதிவேக லாரிகளுக்கு கடிவாளம் அவசியம்
ஊட்டி: ஊட்டி அருகே லாரி, ஜீப் மோதிய விபத்தில், 9 பேர் காயமடைந்தனர்.
ஊட்டி அருகே , எமரால்டு பகுதியில் இருந்து கேரட் அறுவடை பணிக்காக காலை நேரத்தில், 9 பேர் ஜீப்பில் வந்துள்ளனர். பணி முடிந்து மீண்டும் எமரால்டு பகுதிக்கு தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றனர். அப்போது, இத்தலார் அருகே , எல்லகண்டி சாலையில் அதிவேகமாக வந்த லாரி, ஜீப் மீது மோதியது.
ஜீப்பில் பயணித்த கலா, சிந்தாமணி, மாதேஷ் உட்பட , 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அங்குள்ள இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ரூரல் டி.எஸ்.பி. , ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ‘லாரி டிரைவரின் அதிவேகம் விபத்துக்கு காரணம்,’என , தெரியவந்துள்ளது.
நடவடிக்கை அவசியம்:
அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் கூறுகையில்,‘‘எமரால்டிலிருந்து எம். பாலாடா வரை காலை, 10:00 மணி வரை அதிகளவிலான கேரட் லாரிகள் அதிவேகத்தில் சென்று வருகிறது. காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையிலான, ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் பள்ளி வேன் , அரசு பஸ்கள் , தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. அந்த சமயத்தில் கேரட் லோடு ஏற்றி வரும் லாரிகள் அதிவேகத்தில் வருவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
மேலும்
-
தடுப்பு சுவர் சேதம்
-
மின்வாரியத்தில் 8,000 பேரை தேர்வு செய்ய அரசு அனுமதி
-
ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
-
விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுத்தது ‘தினமலர்’
-
மது போதையில் காரை ஓட்டி ரகளை
-
நான்கு மாநில சட்ட மேல்சபை தேர்தலில் காங்., படுதோல்வி! ஒரு இடம்கூட கிடைக்கவில்லை