மது போதையில் காரை ஓட்டி ரகளை

1

யானைகவுனி: சென்னை, யானை கவுனி, வால்டாக்ஸ் சாலை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, தாறுமாறாக ஓடிய ‘சுசூகி விட்டாரா’ கார், சாலையில் நிறுத்தி இருந்த ‘ஹோண்டா டியோ, ஆக்டிவா’ ஆகிய ஸ்கூட்டர்கள் மீது மோதி, நிற்காமல் ஓட்டி ரகளை செய்தனர்.

அங்கிருந்தோர் காரை விரட்டி சென்று மூலக்கொத்தளம் சந்திப்பில் மடக்கினர்.

பூக்கடை போலீசார் விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த முகமது சினான், 23, அவரது தோழியான 23 வயதுடைய பெண் ஆகியோர், மது போதையில் இருந்தது தெரிந்தது.

வெளிநாட்டில் பணி புரியும் இருவரும், விடு முறைக்காக சென்னை வந்திருப்பதும் தெரிந்தது.

சேதமடைந்த இரு ஸ்கூட்டர்களை சரிசெய்து தருவதாக முகமது சினான் கூறினார். எனினும் போலீசார், மது போதையில் கார் ஓட்டியதாக, அவருக்கு அபராதம் விதித்தனர்.

Advertisement