வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பாலுார் நடுகாலனியை சேர்ந்த கனகராஜ் மனைவி கலைச்செல்வி,37;இவர் கடலுார் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 27 ம் தேதி காலை வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.வீட்டிற்கு வந்து பார்த்த கலைச்செல்வி வீடு திறந்து இருந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ திருந்து இருந்தது.

பீரோவில் இருந்த 2 கிராம் பவுன் நகைகள்,140 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. திருடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம்.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்ததில் பாலுார் நடுகாலனியை சேர்ந்த தினேஷ்,24; திருடியது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement