விருத்தாசலம் பகுதியில் 13 ஏரிகளை குத்தகை எடுக்க விண்ணபிக்கலாம்
கடலுார்: மீன்வளர்ப்போர் மேம்பாடு முகமையின் கீழ் கடலுார் மற்றும் விருத்தாசலம் பாசனப்பிரிற்குட்பட்ட 13 ஏரிகள் குத்தகைக்கு விடப்படவுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் கடலுார் மற்றும் விருத்தாசலம் பாசனப்பிரிவிற்குட்பட்ட 13 ஏரிகளை 3 ஆண்டு காலத்திற்கு மீன்பாசி குத்தகைக்கு விட ஏதுவாக 10.11.2026 முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் கடலுார் (வடக்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனரால் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், குறைந்த பட்ச ஏலக்கூறும் விலை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். தொடர்புக்கு தொலைபேசி எண்: 04142-238170 மின்னஞ்சல் முகவரி: adfcuddalore1@gmail.com மற்றும் fcuddalorenorth@gmail.com கடலுார் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகுப்பம் மணக்கொல்லை ஹிசா ஏரி, தோப்புக்கொல்லை முடவன் ஏரி, த.பாளையம் பெரிய ஏரி, முனியன் ஏரி, பரவட்டை ஏரி, கண்ணாடி ஏரி, ஆடூர் அகரம் ஏரி, சேடப்பள்ளம் ஏரி, தோட்டப்பட்டு ஏரி, களையூர் மாவடி ஏரி, துாக்கணாம்பாக்கம் ஏரி, தென்னம்பாக்கம் தாங்கல் ஏரி மற்றும் திருப்பணாம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகள் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்