தொட்டதற்கெல்லாம் மக்களை குறை சொல்வதா? தமிழக அமைச்சருக்கு நயினார் கண்டனம்
சென்னை: தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;
நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு தான் காரணம் எனக் கூறியது அறியாமையிலா? அல்லது, கமிஷன் தந்த ஆலைகளை காப்பாற்றவா? மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு ஆகியவை ஆற்றில் கலப்பதனால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என்னும் "விஞ்ஞான" ரீதியான விளக்கத்தை தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நீர்நிலைகளில் சட்ட விரோதமாக திறந்துவிடப்படுவதே நுரை பொங்க முக்கியக் காரணம் எனும் அடிப்படைக் கூற்றை மறைத்து, சோப்பு ஷாம்பு தான் காரணம் என மக்களை நோக்கி குறை கூறும் தவெக அமைச்சர்கள் இந்தக் கருத்தை அறியாமை என எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.
தமிழகத்தின் நீராதாரங்களை கண்காணிக்க இயலாத தவெக அரசின் திறனின்மையை மறைப்பதற்காவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆலைகளை காப்பாற்றி கமிஷன் பெறுவதற்காகவோ கூறப்பட்ட கருத்தோ இது எனும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
பதவியேற்றப் புதிதில் தனது துறையை மாற்றிக் குறிப்பிட்டதைப் போல, இன்னும் தான் வகிக்கும் துறையை சுற்றுலாத் துறை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் புரியவில்லை.
இனியாவது, தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, பதவியின் பொறுப்பினை உணர்ந்து, முதலில் போர்க்கால அடிப்படையில் நொய்யல் ஆற்றினை தூய்மைப்படுத்த வேண்டும். கமிஷன் தூண்டிலில் சிக்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நீராதாரத்தை காக்க வேண்டும்,
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
-
இந்தியாவின் கடல்சார், சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் உத்வேகம்; பிரதமர் மோடி
-
செயின்ட் ஜோசப் கல்லுாரியில் வரும் 31ம் தேதி கல்விக்கடன் வழங்கும் முகாம்
-
ஸ்டேஷனில் இருந்த அலைபேசியை விற்ற ஏட்டு மீது வழக்கு
-
விபத்துகள் தவிர்க்க முனைப்பு அவசியம்
-
பெண்ணாடம் பேரூராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் எதிர்பார்ப்பு