தந்தை, மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: தகராறில் தந்தை, மகனைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் திருநகரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 61; இவர் தனது மகன் பிரசன்னா, 29; என்பவருடன் காரில் சாலை அகரம் பகுதியில் சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த ராகவன்பேட்டையைச் சேர்ந்த பாண்டிதுரை, 35; மற்றும் 3 பேர், ஹாரன் அடித்து வழி கேட்டால் வழி விடமாட்டீர்களா எனக்கேட்டு தகராறு செய்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பாண்டிதுரை உள்ளிட்டோர் சேர்ந்து குப்புசாமி, பிரசன்னாவை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார் பாண்டிதுரை உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement