ஸ்ரீமதி கோப்பை மாவட்ட கிரிக்கெட் போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஸ்ரீமதி கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் தனியார் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப், எங் டைட்டன்ஸ் சி.சி. அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் ஆடிய விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் 224/4 ரன் 25 ஓவரில் எடுத்தது. சஞ்சய் பாலாஜி 83, முகமது ஹபிஸ் 30, கோபிநாதபாண்டி 42 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய எங் டைட்டன்ஸ் சி.சி.,அணி 21 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பவுலர் நவீன் 8 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து நடந்த போட்டிகளின் படி திண்டுக்கல் மெஜஸ்டிக் சி.சி., அணி 169/7 ரன் எடுத்தது. ஜெயந்தன் 60 ரன், அனிருத்ரன் 3 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து ஆடிய லக்சர் வேர்ல்டு கிரிக்கெட் அகாடமி அணி 99 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அணியின் விதித் விஷ்ணு 26 ரன், அர்ஜூனா 5 விக்கெட் வீழ்த்தினார்.எரியோடு எங்ஸ்டர்ஸ் ஜூனியர்ஸ் சி.சி.,அணி 24.4 ஓவரில் 80 ரன் எடுத்து இலக்கு நிர்ணயித்தது. அடுத்து விளையாடிய ஒட்டன்சத்திரம் பட்ஸ் சி.சி.,அணி 21.1 ஓவரில் 81/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பண்ணை பள்ளி அணி 18 ஓவரில் 72 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய அக் ஷயா அணி 10.3 ஓவரில் 73/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும்
-
டிஜிட்டல் மோசடியால் ஏற்படும் இழப்பை கண்டறிவது வங்கிகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட்
-
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: சீமான்
-
தேசத்துரோக வழக்கில் திருநெல்வேலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கைதிகள் தப்பியதன் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
-
ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை