வெள்ளாடுகள் திருட்டு போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: நின்னையூரில் விளைநிலத்தில் இருந்த 6 வெள்ளாடுகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் அரிகோவிந்தன், 38; விவசாயி. இவர், 6 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இன்று (அக்.,28) இன்று பார்த்தபோது பட்டியில் இருந்த 6 ஆடுகளும் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement