தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.35 ஆயிரம் அபராதம் விதிப்பு
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட நாமல்பேட்டையில் நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாகவும், அதிகாரிகள் நடவடிக்கையில் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஓசூர், மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சுகாதாரத்துறையினர் நேற்று நாமல்பேட்டை பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் மறைத்து வைக்கப்பட்ட பாலீதின் கவர்கள் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், ஸ்டிராக்கள் மற்றும் பிற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்காரர்களுக்கு, 35,000 ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி