தொடர் மழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம், 5 நாட்கள் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது.

இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், நெல் வயலில் மழை நீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்துள்ளது. இதனால் கடன்பெற்று நெல் நாற்று நடவு செய்து, உரம், பூச்சி மருந்து என பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, நெற்கதிர்கள் வயலில் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் காவேரிப்பட்டணம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement