மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி பெற அழைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,
அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், மொபைல் போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 30 நாட்கள் மொபைல் போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, 19 முதல், 50 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 'இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி' என்ற முகவரியிலும், மேலும், 90806 76557, 90252 54260, 94422 47921, என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி