வெள்ளி கொள்ளை வழக்கு மேலும் 5 பேருக்கு ‘காப்பு’
சேலம்: சேலம், பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 58. இவரது வெள்ளி பட்டறை காவலாளி வெங்கடேசனை தாக்கி, 550 கிலோ வெள்ளி பொருட்கள், கடந்த, 12ல் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படை போலீசார் விசாரித்து, கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளி அபி ேஷக், 21, உள்பட, 5 பேரை, கடந்த, 23ல் கைது செய்து, 323 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர். இரு கார்களை பறிமுதல் செய்து, மேலும் சிலரை தேடினர்.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உதவியாக, பட்டறையில் வெள்ளி ஆபரணங்கள் இருப்பு குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்ததாக, தஞ்சாவூரை சேர்ந்த நீலவேணி, 35, சேலம், தாதகாப்பட்டி ராஜாராம், 55, அம்மாபேட்டை மனோஜ், 36, பெரமனுார் தங்கராஜ், 57, மெய்யனுார் மகேந்திரன், 52, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Vasan - ,இந்தியா
29 அக்,2026 - 02:35 Report Abuse
காப்பு வெள்ளிக்காப்பு? 0
0
Reply
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
Advertisement
Advertisement