இரண்டு நாட்களாக மழை இன்றி வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் மழை பொழிவு இல்லை.

மாறாக வெயில் வழக்கம் போல் இருந்தது. ஏற்கனவே பெய்த மழைக்கு கோபியில் ஒரு குடிசை வீடு, நம்பியூரில் ஒரு கான்கிரீட் வீடும் இடிந்தது. பெருந்துறையில் கறவை மாடு இடிதாக்கி இறந்தது என, வருவாய் துறையினர் பதிவு செய்துள்ளனர். தீபாவளி விற்பனை காலத்தில் மழை இல்லாதது, குறிப்பாக சந்தை நாளில் மழை இல்லாதது சிறு ஜவுளி வியாபாரிகள், சாலையோர ஜவுளி வியாபாரிகளை நிம்மதி அடைய செய்தது. மழை இல்லாததால், பொதுமக்களும் ஈரோடு கடை வீதிக்கு பொருட்களை வாங்க வருகின்றனர். குறிப்பாக அரசின் இலவச பஸ் பயண திட்டத்தால், பெண்கள் அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து மாநகருக்கு ஜவுளி மட்டுமின்றி, பல்வேறு வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

Advertisement