ஹேண்ட்பால் போட்டி அரசு பள்ளி முதலிடம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், வருவாய் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.
வருவாய் மாவட்ட அளவில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில், கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளி அணியை வென்று, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். அணிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் தனக்குமார், சுதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement