இலவசங்களை பெறும்போது விலைவாசி உயரத்தான் செய்யும்: மதுரை ஆதீனம் கருத்து

கமுதி: “இலவசங்களை பெறும்போது, விலைவாசியும் உயரத்தான் செய்யும்,” என மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில், இன்று (அக்.,30) மரியாதை செலுத்திய பின், அவர் கூறியதாவது:

முத்துராமலிங்க தேவர், மதுரை ஆதீனத்தின் சீடராக இருந்தவர். மதுரை ஆதீனத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். தன் நினைவிடத்திற்கு, மதுரை ஆதீனத்தின் பிரசாதம், எப்போதும் வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவரது நினைவாலயத்திற்கு பிரசாதம் கொண்டு வரப்பட்டது.

அவர், தேசியத்தையும் தெய்வீகத்தையும், இரு கண்களாக போற்றி வாழ்ந்தார். தமிழகத்தில், த.வெ.க., ஆட்சி சிறப்பாக நடக்கிறது. மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறுகளை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுக்கிறேன். மக்கள் இலவசங்களை பெறும்போது, விலைவாசியும் உயரத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்-.

Advertisement