அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன், இணை செயலர் சரவணமணி, சீனிவாசன், விஜய்மனோகரன் உட்பட பலர் பேசினர்.'டி.ஏ.பி.எஸ்.,' திட்டத்துக்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கையை துவங்க வேண்டும். 2025 டிச., 31க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 'டி.ஏ.பி.எஸ்.,'
திட்டத்தின் பயன்களை நீட்டிக்க வேண்டும். சமூக நலத்துறையில் பணியாற்றும் களப்பணியாளர்கள், மருத்துவ துறையில் பணி செய்யும் சுகாதார ஆய்வாளர்கள், அனைத்து மருந்தாளுனர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களை கொண்டே, காலை உணவு திட்டத்தை செயல்
படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை
களை வலியுறுத்தினர். மாவட்ட
பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.

Advertisement