தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
- நமது நிருபர்-
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நேற்று (அக்டோபர் 28) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி நிலயவியது. இதனால் இன்று காலை 05:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அதே பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
இன்று( அக்டோபர்29) மற்றும் நாளை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 01
வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நவம்பர் 02 ல்நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும்
நவம்பர் 03ல் நீலகிரியில் கனமழை பெய்யும்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்