பண்ணாரி கோவில் உண்டியலில் ரூ.77.78 லட்சம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் என பலரும் இப்பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 77 லட்சத்து, 78,848,ரூபாய் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 166 கிராம் தங்கம், 676 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.

Advertisement