விஷ ஜந்து கடித்து பெண் சாவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அடுத்த,

இக்கரை தத்தப்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மணியன் என்பவரின் மனைவி மணி, 58. கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 21ல், வீட்டில் இருந்தபோது விஷஜந்து கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement