அரசு ஊழியர் தர்ணா
கிருஷ்ணகிரி, அக். 29
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அண்ணா குபேரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். அதில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட விதிமுறைகளை வெளியிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி, டி.ஏ.பி.எஸ்., உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு