ஓசூரில் பொது இடங்களில் கொட்டிய குப்பை வீட்டிற்கே திருப்பி அனுப்பிய மாநகராட்சி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் மற்றும் மாநகர நல அலுவலர் அஜிதா ஆகியோர் உத்தரவின்படி, மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட வி.ஓ.சி., நகரில், பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை, மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மீண்டும் அவர் களது வீடுகளுக்கே குப்பை எடுத்து சென்று, ஒப்படைக்கப்பட்டது.மேலும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்றும், சுற்றுப்புறத்தை துாய்மையாக பேண, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர். குப்பை கொட்டியவர்களில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும், மாநகராட்சி சார்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவு களை, மக்கும் குப்பை,
மக்காத குப்பை, வீட்டு அபாய கழிவு மற்றும் சுகாதார கழிவு என, 4 வகைகளாக தரம் பிரித்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சுற்றுச்சூழல், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி