இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
அரூர்: அரூர் அடுத்த செக்காம்பட்டியை சேர்ந்தவர் மோகனப்பிரியா, 21. அவருக்கும் அம்மாபாளையத்தை சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் திருமணமானது.
திருமணத்திற்கு பிறகு மோகனப்பிரியா டெய்லர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.இதனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆயுத பூஜையின்போது தாய் வீட்டிற்கு வந்த மோகனப்பிரியா தொடர்ந்து, வேலைக்கு சென்றுள்ளார். இதை, அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா கடந்த, 23ம் தேதி மாலை பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால், அரூர் ஆர்.டி.ஓ.,
செம்மலை விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
Advertisement
Advertisement