மொபைல் டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்
சூளகிரி: சூளகிரி அடுத்த காருபல்லா அருகே தின்னுாரை சேர்ந்தவர் அம்ரீஷ், 35. தச்சுத்தொழிலாளி. இவர் மனைவி பார்வதி, 32. இவர்களுக்கு கடந்த, 7 ஆண்டுக்கு முன் திருமணமானது.
பார்வதி கர்ப்பமாக இருந்தபோது, கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து பாத்தக்கோட்டாவிலுள்ள தன் தந்தை வீட்டில் தங்கி, ஓசூரிலுள்ள
ஜவுளிக்கடையில் பணியாற்றி செய்கிறார்.
இவருடன் அவரின், 6 வயது மகள் உள்ளார்.நேற்று மதியம், 1:00 மணிக்கு, பாத்தக்கோட்டா கிராமம் வந்த அம்ரீஷ், அங்கிருந்த தனியார் மொபைல்போன் டவரில் ஏறி, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டார். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், உத்தனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர், மொபைல்போனில் அம்ரீஷிடம் பேசினர்.
கணவருடன் செல்ல பார்வதி மறுத்து விட்டார். பின்னர் அம்ரீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாலை, 4:30 மணிக்கு போலீசார் கீழே இறங்க வைத்து, மருத்துவ பரிசோதனைக்கு, ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
வயிறு காஞ்சா தானே இறங்கி வருவான். அப்பிடியே கீழ விழுந்தா மனைவிக்கு, நா ட்டுக்கும் லாபம்.மேலும்
-
ரூ.100 கோடி லஞ்சம்; 5 மாதம் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ சரண்
-
ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை
-
அரசிற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
-
இன்றைய தங்க விலை நிலவரம்; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்