உதயநிதியின் அரசியல் எதிர்காலம்?.. :அந்துமணி பதில்கள்

3

@block_B@லட்சுமி நாகராஜன், சாத்துார்:

'என் மீதான குற்றச்சாட்டை த.வெ.க., அரசால் நிரூபிக்க முடியாது' என்று, 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க., அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகிறாரே?

block_B

'நிரூபிக்க முடியாது' என்று தானே கூறியுள்ளார். 'நான் தவறு செய்யவில்லை' என்று கூறவில்லை பாருங்கள். பூனை பையிலிருந்து எட்டிப் பார்க்கிறதே!

@block_Y@சி.பி.செந்தில்குமார், சென்னிமலை:

'மேயர், அரசாங்கத்தை புறக்கணிக்கவில்லை; அரசு தான் மேயரை புறக்கணிக்கிறது' என்கிறாரே மேயர் பிரியா?

block_Y

அரசு புறக்கணித்தாலும், நீங்கள் உங்கள் பணியை சரியாக செய்தால், மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பரே... நீங்கள் ஏன் செய்வதில்லை? அத்துடன் உங்கள் ஊதியத்தை புறக்கணிக்கிறீர்களா என்ன?

@block_P@வ.முருகன், விழுப்புரம்:

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது, தன் எழுத்துகளுக்காக, 'புலிட்சர்' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறாரே?

block_P

என் நல்ல நண்பரான, 'ஆனந்த விகடன்' ஸ்ரீனிவாசன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லையெனில் தனக்கு, விகடன் சின்னத்திரை விருதுகள் அளிக்க வேண்டும் என்று கூட கோரிக்கை வைப்பார் டிரம்ப்!

@block_G@எம்.மதுமிதா, சென்னை:

'மோடி அரசியல் சூப்பர் ஸ்டார்; ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார்' என, பா.ஜ.,வை சேர்ந்த சசிகலா புஷ்பா புகழ்கிறாரே?

block_G
Latest Tamil News
அவர் புதிதாக எதையும் சொல்லவில்லையே! சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்!

@block_B@ப.சூரியன், வேலுார்:

விமானத்துக்கான எரிபொருள் வாட் வரியை, 29 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக தமிழக அரசு குறைத்திருப்பது குறித்து?

block_B

இதனால் நம் விமான போக்குவரத்து துறை வளரும். பல நாட்டு விமானங்களும் தமிழகம் முழுதும் தங்கள் சேவையை வழங்க முன்வரும். சுற்றுலாவும் வளரும்; வாணிபமும் பெருகும்.

@block_Y@எஸ்.முத்தம்மாள், பரமக்குடி:

தன் சொந்த தொகுதியான சேப்பாக்கம் பகுதி மக்கள், மழையால் தத்தளிக்கும் நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, துபாய்க்கு சென்று வந்திருக்கிறாரே?

block_Y

தி.மு.க., கட்சி முடிந்தபோன சக்தியாக மாறி வரும் நிலையில், உதயநிதி தனக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துள்ளார். அதனால், தன் தொகுதி மக்களின் அவலங்களை உதாசீனப்படுத்தி விட்டு, தன் முதலீடுகளில் கவனம் செலுத்த, வெளிநாடுகளுக்கு அவ்வப்போது பறந்து விடுகிறார்.

Advertisement