தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கு சிறையில் எண்ணெய் இல்லாத உணவு

59

சென்னை: 'புழல் சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் துாக்கமின்றி தவிக்கிறார்' என, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:



* மகேஷ், புழல் மத்திய சிறையில், முதல் வகுப்பு பிரிவில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்

* கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மின் விசிறி வழங்கப்பட்டு உள்ளது

* நீதிமன்ற காவல் கைதி என்பதால், அவர், வழக்கமான உடை உடுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது

* முதல் வகுப்பு கைதி என்பதால், அவர் அறையில் கழிப்பறை வசதி உள்ளது

* 'ஏசி' வசதி இல்லாததால், இரவு துாங்க முடியாமல் தவித்துள்ளார்

* மகேஷ் உடல்நிலையை காரணமாகக் கூறி, அவரது வழக்கறிஞர் சிறப்பு உணவு வழங்க, நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, டாக்டர்களின் அறிவுரையின்படி, எண்ணெய் இல்லாத உணவு, சாதம், ரசம், வேகவைத்த காய்கறிகள் வழங்கப்படுகிறது

* முதல் வகுப்பில் அடைக்கப்பட்டு இருப்பதால், வாரத்தில் மூன்று நாள் கோழிக்கறி குழம்புடன் உணவு வழங்கப்படும்

* இரவு உணவாக, சப்பாத்தி, கஞ்சி தரப்படுகிறது

* பொழுது போக்கிற்கு செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிக்கவும், அங்குள்ள நுாலகத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது

* முன்னாள் அமைச்சர் என்பதால், பாதுகாப்பு கருதி, மற்ற கைதிகள் அவரை சந்திக்க முடியாது

* எக்காரணத்தை முன்னிட்டும், வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு தரப்படாது

* நேற்று மகேஷ் நடை பயிற்சி சென்றார்

* சிறை விதிகளின்படி, வாரத்திற்கு இருமுறை அவரை, குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், நண்பர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும்

* கொசு விரட்டி கொடுக்கப்பட்டபோதும், புழல் பகுதியில் கொசு தொல்லை அதிகம் என்பதால், துாங்குவதற்கு அவர் சிரமப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_P@

காவலில் எடுக்க மனு



தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாக, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் கைதான, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று மனு தாக்கல் செய்தனர்.block_P

Advertisement