புதிய கட்டணத்துக்கு முன் டிஜிட்டல் மீட்டர் வேண்டும்

கோவை: ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைத்து, அனைத்து ஆட்டோக்களுக்கும் புதிய டிஜிட்டல் மீட்டர்களை வழங்க, கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 'மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. புதிய கட்டணத்தை அமல்படுத்தும் முன், அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர் வழங்கி, பொருத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்களும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

முத்தரப்பு கமிட்டி அமைத்து எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தீபாவளி போனஸாக நலவாரியம் மூலம் ரூ.5,000 வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement