அமெரிக்கா உளவு பார்த்ததாக சீன பெண் மீது குற்றச்சாட்டு
வாஷிங்டன்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரை தலைமையிடமாக வைத்து இயங்கும், ‘மெகாஸ்பீடு’ என்ற டேட்டா சென்டர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி, ஆலிஸ் ஹுவாங். இவர், அமெரிக்காவின் முன்னணி கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான, ‘என்விடியா’வின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங்குடன் நெருக்கமாக பழகி உள்ளார். அவரை ஏமாற்றி அமெரிக்காவின் தொழில்நுட்ப ரகசியங்களை, ஆலிஸ் ஹுவாங் சீனாவுக்கு கொடுத்து விட்டதாக அந்நாட்டின் உளவு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. சிங்கப்பூர் வழியாக, ‘என்விடியா’வின் சிப்களை சீனா ரகசியமாக வாங்க அலிஸ் ஹுவாங்கின், ‘மெகாஸ்பீடு’ நிறுவனம் உதவியதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதை சீனா மறுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement