தேசிய ஒருமைப்பாடு தினம்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ., நந்தகுமார், எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ஆகியோர் பொருளாதார குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கினர்.

தொடர்ந்து மாணவர்கள் ஒருமைப்பாட்டிற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் முதல்வர் ஆனந்த், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement