இந்தியன் வங்கி நிதிசார் விழிப்புணர்வு முகாம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு இந்தியன் வங்கி சார்பில் நிதி சார் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் கிராமத்தில் நடந்த முகாமிற்க, வங்கி கிளை மேலாளர் பிரதீப் தலைமை தாங்கினார். பகுதி மேலாளர் பாலாஜி, மேற்பார்வையாளர் வேல்ராஜ், இந்தியன் வங்கி பைனான்ஸ் இன்குலுஷ்னர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முன்னோடி வங்கிகளின் மேலாளர் வெங்கடேசன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி சசிக்குமார் ஆகியோர், வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை, தொலைபேசியில் கடன் தருவதாக கூறி மோசடியை நம்பி ஏமாறுதல், தங்களது வங்கி கணக்கு எண்ணை அடமானம் வைத்து பணம் எடுத்தல், பரிவர்த்தனையை தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொண்டனர்.

மத்திய அரசின் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் கட்டாயம் பதிவு செய்து பேரிடர் காலங்கள், உயிருக்கு ஆபத்தான காலங்களில் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி கொள்ள அறிவுருத்தினர்.

வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ககலந்து கொண்டனர்.

Advertisement