தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் த.வெ.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஸ்வினி செந்தில்குமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் கலா சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினர்.
தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா சக்கரபாணி, வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அன்பு அன்பரசு முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி மாநில துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, கல்வியாளர் அணி மாநில இணை செயலாளர் மலர்விழி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாக திறனற்ற த.வெ.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்களை பாதிப்படைகின்றனர். நாட்டில் மது கலாசாரம் பெருகி உள்ளது என்பது குறித்து கோஷம் எழுப்பினர்.
வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., உதயசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் புவனேஸ்வரி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு மற்றும் தனலட்சுமி, விமலா, தவமணி, சீலா ராஜேந்திரன், யுவராணி உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், சார்பு அணிகளைச் சேர்ந்த மகளிர் நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அட்மா திட்ட பயிற்சி முகாம்
-
கொசுக்கடியால் கால்நடை பாதிப்பு
-
விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு
-
மழைநீர் வழிந்தோடும் வகையில் சாலைகளை சீரமைப்பது அவசியம்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி
-
‘நானும் ரவுடி தான் நிர்மல்குமார்’ தினகரன் கிண்டல்
-
ரூ.30க்கு தரமற்ற அரிசி அன்புமணி குற்றச்சாட்டு