ஊழல் தடுப்பு உறுதிமொழியேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஜே.எஸ்., பள்ளி மாணவர்கள் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.

கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடைந்த உறுதிமொழியேற்பில், நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது.

அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.

எனவே, அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன்.

ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., மற்றும் தியாகதுருகம் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement