காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கடவூர் அருகே, முள்ளிப்பாடி ஏரிக்கு, மாயனுாரில் இருந்து காவிரி
உபரி நீரை கொண்டுவர வேண்டும் என, கலெக்டரிடம், தமிழ்நாடு விவசாய
சங்க மாவட்ட துணை தலைவர் வீரமலை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க,
மாவட்ட பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து,
கலெக் டர் உத்தரவுப்படி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் முகமது
உசேன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் சஞ்சய், நீர்வளத்துறை உதவி
பொறியாளர் அக்ஷயா ஆகியோர் முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு நேரில் சென்று
ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட
பொருளாளர் வேல்முருகன், கடவூர் மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பழனிவேல்,
வி.ச., மாவட்ட துணை தலைவர் வீரமலை ஆகியோரை, முள்ளிப்பாடி பெரிய
ஏரிக்கு வரவழைத்து வரைபடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது,
'மாயனுார் காவிரியில் இருந்து உபரி நீரை முள்ளிப்பாடி ஏரிக்கு கொண்டு
வருவதற்கு, ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, மாவட்ட
நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள்
அனுப்பப்பட்டுள்ளன. மாயனுார் தடுப்பணையிலிருந்து, முள்ளிப்பாடி
உள்பட பல்வேறு பாசன ஏரிகளுக்கு பம்பிங் சிஸ்டம் மூலம் காவிரி உபரி நீரை
கொண்டு வருவதற்கு, ஆய்வு செய்து திட்ட அறிக்கைகள்
அனுப்பப்பட்டுள்ளன. அதனால், கூடிய விரைவில் முள்ளிப்பாடி ஏரிக்கு,
காவிரி உபரி நீரை பம்பிங் சிஸ்டம் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பாலங்களில் ஓட்டையை குப்பையால் மறைத்த நகராட்சி
-
சிந்திக்க வைக்கும் பாடத்திட்டங்கள்: பல்கலைகளுக்கு உயர்கல்வி மன்றம் 'அட்வைஸ்'
-
உர விற்பனையாளர்கள்,அலுவலர்களுக்கு பயிற்சி
-
மக்கள் குறைதீர் கூட்டத்தில்373 மனுக்கள் வழங்கல்
-
கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ்: மாவட்ட கலெக்டரிடம் மனு
-
அரசுப்பள்ளியை சூழும் புகை: பேரூராட்சியால் மக்கள் அவதி